மனிதர்களால் இரவு நேர வானில் மட்டுமே நட்சத்திரங்களை பார்க்க முடியும். தற்போது, இரவு நேரத்தில், ஒளி மாசு அதிகமாக காணப்படுவதால், அடுத்த 20 ஆண்டுகளில், மனிதர்களால் நட்சத்திரங்களை பார்க்க முடியாத நிலை ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மூன்றில் ஒரு மனிதருக்கு நட்சத்திரங்களை பார்க்க முடியாத நிலை உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். குறிப்பாக, “எல் இ டி வெளிச்சங்கள் இரவு நேரத்தை அதிக பிரகாசமாக மாற்றுகின்றன. எனவே, இதே நிலை தொடரும் பட்சத்தில், அடுத்த தலைமுறைக்கு நட்சத்திரங்களை பார்க்கவே முடியாத நிலை ஏற்படும். தற்போதைய நிலையில், வானில் 250 நட்சத்திரங்களை பார்க்க முடியும் நபர் ஒருவரால், 18 ஆண்டுகள் கழித்து 100 நட்சத்திரங்களை மட்டுமே பார்க்க முடியும்” என்று வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும், “நிலவொளியை மட்டுமே நம்பி சில உயிரினங்கள் உள்ளன. ஒளி மாசு அதிகரிப்பதால், இந்த உயிரினங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன” என்று கவலை தெரிவித்துள்ளனர்.