பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா,ஒடிசா,அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதில் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. இதில் 60 தொகுதிகளில் பா.ஜனதா போட்டியிட்ட நிலையில் காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தியது. இது தவிர தேசிய மக்கள் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட சில முக்கிய கட்சிகளும் தேர்தலில் களமிறங்கினார். அதில் அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிமில் நேற்று காலை 6 மணிக்கு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதில் மீண்டும் சிக்கிமில் ஆளும் மாநில கட்சியான சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சி மொத்தம் 26 இடங்களை வென்று ஐந்து இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் மீண்டும் சிக்கிமில் எஸ்.கே.எம் கட்சி பெரும்பான்மை உடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மேலும் பாஜக, காங்கிரஸ் தேசிய கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்துள்ளது