சென்னையில் வடிகால் பணிகளின் போது விபத்தை தடுக்க நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர்

October 28, 2022

சென்னையில் வடிகால் பணிகளின் போது விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், சென்னையில் மிகப்பெரிய அளவிலான மழைநீர் வடிகால் பணிகளை புதிதாக தொடங்க வேண்டாம். மேலும் பணி நடைபெறும் இடங்களில் பச்சை நிற துணி தடுப்பு தேவை என்றும் தெரிவித்துள்ளார். அத்தியாவசியமான மற்றும் அவசரமான பணிகளை மட்டும் தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். பாதுகாப்பான முறையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறவும், மக்களுக்கு இடையூறு […]

சென்னையில் வடிகால் பணிகளின் போது விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், சென்னையில் மிகப்பெரிய அளவிலான மழைநீர் வடிகால் பணிகளை புதிதாக தொடங்க வேண்டாம். மேலும் பணி நடைபெறும் இடங்களில் பச்சை நிற துணி தடுப்பு தேவை என்றும் தெரிவித்துள்ளார். அத்தியாவசியமான மற்றும் அவசரமான பணிகளை மட்டும் தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பான முறையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறவும், மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு மேற்கொள்ள வேண்டும். வடிகால் பணிகளின் போது விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரச்சனைக்குரிய இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்து விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu