பனி காலங்களில் ரயில் விபத்தை தடுக்க நடவடிக்கை - இந்திய ரயில்வே

December 7, 2022

மூடுபனி காலங்களில் ரயில் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. வட மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் குளிர் காலம் தொடங்கி உள்ள நிலையில், இரவு வேளைகள் மற்றும் அதிகாலை வேளைகளில் காணப்படும் மூடுபனியின்போது ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்திய ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், விபத்து ஏற்படுவதைத் தடுப்பது மற்றும் ரயில் சேவையின் கால தாமதத்தைக் குறைப்பதற்காக பனி படர்வை நீக்கும் […]

மூடுபனி காலங்களில் ரயில் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

வட மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் குளிர் காலம் தொடங்கி உள்ள நிலையில், இரவு வேளைகள் மற்றும் அதிகாலை வேளைகளில் காணப்படும் மூடுபனியின்போது ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்திய ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், விபத்து ஏற்படுவதைத் தடுப்பது மற்றும் ரயில் சேவையின் கால தாமதத்தைக் குறைப்பதற்காக பனி படர்வை நீக்கும் கருவிகளை ரெயில் இஞ்சின்களில் பொருத்த வேண்டும்.

மேலும், அதிக ஒலி எழுப்பக்கூடிய கருவிகளை பொருத்துவது, தண்டவாளங்களுக்கு அருகில் வெள்ளை நிற கோடுகளை போடுவது, லெவல் கிராசிங் பகுதிகளில் விசில் எழுப்பக் கூடிய கருவிகள் பொருத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுகிறது. மேலும் ரயில்களை 60 கிலோ மீட்டரிலிருந்து 75 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu