அமெரிக்காவில் பயன்படுத்தப்படாமல் உள்ள கிரீன் கார்டுகளை திரும்ப பெற ஜனாதிபதியின் ஆலோசனைக்குழு உறுப்பினரான அஜய் பூடோரியா பரிந்துரை செய்து உள்ளார்.
கிரீன் கார்டு பெறுவதில் உள்ள தாமதத்தை குறைக்க அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை வருகிறது. அதன் ஒருபகுதியாக 1992 முதல் 2022-ம் ஆண்டு பயன்படுத்தப்படாமல் உள்ள கிரீன் கார்டுகளை திரும்ப பெற ஜனாதிபதியின் ஆலோசனைக்குழு உறுப்பினரான அஜய் பூடோரியா பரிந்துரை செய்து உள்ளார்.
இதன் மூலம் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் கிரீன் கார்டுகள் திரும்ப பெறப்படும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு நிறைவேறும் பட்சத்தில் கிரீன் கார்டு பெறுவதில் உள்ள தாமதம் குறைந்து அதனை பெற காத்திருப்பவர்களுக்கு நிவாரணமாக அமையும் என அஜய் கூறினார்.