பாகிஸ்தானில் இருந்து வரும் அஞ்சல்கள் மற்றும் பார்சல்களின் பரிமாற்றத்தை முற்றிலுமாக நிறுத்த மத்திய தபால் துறை முடிவு செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தாக்குதலுக்குப் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் தொடர்புடையவர்கள் என தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து வரும் அஞ்சல்கள் மற்றும் பார்சல்களின் பரிமாற்றத்தை முற்றிலுமாக நிறுத்த மத்திய தபால் துறை முடிவு செய்துள்ளது. வான்வழி மற்றும் தரைவழியாக வரும் அனைத்து வகையான அஞ்சல்களும், தற்போது தடைக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.














