தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஒடிசா கடற்கரை அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், […]

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஒடிசா கடற்கரை அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழை வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu