ஹிஸ்புல்லா குழுக்களின் ஆயுதங்களைச் சுற்றியுள்ள பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் கடந்த ஒரு வாரமாக ஹிஸ்புல்லாவின் நிலைகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பெய்ரூட் விமான நிலையம் அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்தன. இஸ்ரேல், தாக்குதளுக்கு முன்னர், ஹிஸ்புல்லா குழுக்களின் ஆயுதங்களைச் சுற்றியுள்ள பகுதி மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தது. இஸ்ரேல் ராணுவம், இந்த இடங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் விரைவில் தாக்குதல்கள் நடைபெறும் என தெரிவித்தது. ஏவுகணைகள் வீசுவதன் மூலம் தாக்குதல் நடத்தியது. அதன் முடிவாக, பெய்ரூட்டின் தெற்கு பகுதிகளிலுள்ள கட்டடங்கள் முற்றிலும் தரைமட்டமாகின. இஸ்ரேல், ஹிஸ்புல்லாவின் மறைமுக தாக்குதல்களை எதிர்த்து இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.