ஸ்டார்ஷிப் எடுத்த பூமியின் புகைப்படங்கள் வெளியீடு

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள உலகின் சக்தி வாய்ந்த ராக்கெட் ஸ்டார்ஷிப், கடந்த வாரத்தில் மூன்றாம் முறை பரிசோதிக்கப்பட்டது. அப்போது விண்வெளிக்கு சென்ற ராக்கெட், பூமியின் புகைப்படங்களை எடுத்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்வெளிக்கு சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் போது தொடர்பு துண்டிக்கப்பட்டது. ராக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் மணிக்கு 26000 கிலோமீட்டர் வேகத்தில் ராக்கெட் பயணிக்கும் காணொளி அதிக கவனம் பெற்றுள்ளது. மேலும், ராக்கெட் விண்வெளியில் […]

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள உலகின் சக்தி வாய்ந்த ராக்கெட் ஸ்டார்ஷிப், கடந்த வாரத்தில் மூன்றாம் முறை பரிசோதிக்கப்பட்டது. அப்போது விண்வெளிக்கு சென்ற ராக்கெட், பூமியின் புகைப்படங்களை எடுத்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்வெளிக்கு சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் போது தொடர்பு துண்டிக்கப்பட்டது. ராக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் மணிக்கு 26000 கிலோமீட்டர் வேகத்தில் ராக்கெட் பயணிக்கும் காணொளி அதிக கவனம் பெற்றுள்ளது. மேலும், ராக்கெட் விண்வெளியில் இருந்த போது படம் எடுக்கப்பட்ட பூமியின் நீல நிற வளைவான புகைப்படங்களை எலான் மஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நாசா நிர்வாகி பில் நெல்சன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu