கடந்த சில தினங்களாக தக்காளியின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இந்த நிலையில், சாமானிய மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, மானிய விலையில் தக்காளி விற்பனை செய்வதில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், அரசாங்கத்தின் டிஜிட்டல் வர்த்தகத் தளமான ஓஎன்டிசியில், மானிய விலையில் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு ஓஎன்டிசியில் விற்கப்படுகிறது. இந்திய அரசின் வேளாண் விற்பனை நிறுவனம் மற்றும் வேளாண் கூட்டுறவு அமைப்புகள் ஆகியவை இந்த விற்பனையில் ஈடுபட்டுள்ளன.
ஓ என் டி சி தளத்தில் தக்காளி விற்கப்படுவதால், பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே தக்காளிக்கான ஆர்டரை பதிவு செய்ய முடியும். காலை 9:30 மணி முதல் மதியம் 3:30 மணி வரை, பொதுமக்களின் வீட்டுக்கே தக்காளி விநியோகம் செய்யப்படும். இதற்கு தனியாக டெலிவரி சார்ஜ் கிடையாது. ஆனால், ஒரு ஆர்டருக்கு 2 கிலோ தக்காளி மட்டுமே அதிகபட்சமாக எடுத்துக்கொள்ளப்படும்.














