பிரபல சாண்ட்விச் நிறுவனமான சப்வே, ரோர்க் கேப்பிட்டல் நிறுவனத்திடம் விற்கப்பட உள்ளது.
ரோர்க் கேப்பிட்டல் நிறுவனம், துரித உணவகத் துறையில் அதிக முதலீடுகளை செய்து வருகிறது. இந்த தனியார் நிறுவனம், பிரபல சப்வே நிறுவனத்தை வாங்க உள்ளது. இதன் மூலம், சப்வே நிறுவனம் மேலும் விரிவடையும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக, தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் செய்தி அறிக்கை வெளிவந்துள்ளது. அதில், 9.6 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சப்வே நிறுவனம் விற்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு, சப்வே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜான் சைட்சி, ‘சப்வே நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நிறுவனத்தை ரோர்க் கேப்பிட்டல் கீழ் கொண்டு வருவதாக’ தெரிவித்திருந்தார். இதன் மூலம், சர்வதேச அளவில் சப்வே விரிவாக்கம் அடையும் என கூறியிருந்தார். அதே வேளையில், சப்வேயின் தலைமை பண்பு தக்கவைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.