எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தி பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். இதன் விளைவாக, எக்ஸ் என்ற பெயர் மாற்றப்பட்ட ட்விட்டர் தளத்தின் வருவாய் மற்றும் சந்தை மதிப்பு உயரும் என கருதப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, எக்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த ஓராண்டில் பாதிக்கும் கீழாக குறைந்துள்ளது.எக்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 158000 கோடியாக குறைந்துள்ளது. இது எலான் மஸ்க், இந்த நிறுவனத்தை வாங்கியதற்கு செலவிட்ட 44 பில்லியன் டாலர்கள், அதாவது 337000 கோடியை விட மிகவும் குறைவாகும். எலான் மஸ்க், எக்ஸ் நிறுவனத்தை பங்குச் சந்தையில் பதிவு செய்யும் திட்டத்தில் இருந்தார். தற்போது, எக்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால், பங்குச்சந்தையில் பதிவு செய்யும் சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு என கருதப்படுகிறது.