கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி இன்று திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டு உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதிலிருந்து தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது அங்கு பராமரிப்பு பணிகளின் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்படும். அதன்படி அங்குள்ள இரண்டாவது அணு உலையில் கடந்த மே மாதம் 13ம் தேதி வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, 57 நாட்களுக்கு பின் நேற்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. அதன்படி நேற்று 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் இன்று திடீரென பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது