அரபு நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுல்தான் அல் நயாடி சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், வரும் ஏப்ரல் 28ஆம் தேதி, அவர் விண்வெளி நடை பயணத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி, விண்வெளி நடை பயணத்தில் ஈடுபடும் முதல் அரபு விண்வெளி வீரர் என்ற வரலாற்றை அவர் படைக்க உள்ளார். மேலும், விண்வெளி நடை பயணத்தில் ஈடுபடும் 10வது நாடாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ உள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சில தொழில்நுட்ப சார்ந்த பணிகள் மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக விண்வெளி வீரர்கள் விண்வெளி நடை பயணம் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் சுல்தான் அல் நயாடி நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக, அவருக்கு நாசாவின் ஆய்வகத்தில் 55 மணி நேர பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் ட்விட்டர் வாயிலாக தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.