பூமியை தாக்கிய சூரிய வெடிப்பு

February 8, 2023

கடந்த சில தினங்களாக, சூரிய புயல்கள் பூமியைத் தாக்குவது நிகழாதிருந்த நிலையில், நேற்று எம் 6 ரக தீவிரமான சூரிய வெடிப்பை பூமி எதிர்கொண்டுள்ளது. இதனால், சூரிய புயல் ஏற்பட்டதோடு, சூரிய கரும்புள்ளி ஒன்று இரட்டிப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது. நேற்று நேர்ந்த சூரிய புயலால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை என்றாலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் அமெரிக்காவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் ரேடியோ தொலைத்தொடர்புகள் பாதிப்படைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதே வேளையில், கரும்புள்ளி அளவு […]

கடந்த சில தினங்களாக, சூரிய புயல்கள் பூமியைத் தாக்குவது நிகழாதிருந்த நிலையில், நேற்று எம் 6 ரக தீவிரமான சூரிய வெடிப்பை பூமி எதிர்கொண்டுள்ளது. இதனால், சூரிய புயல் ஏற்பட்டதோடு, சூரிய கரும்புள்ளி ஒன்று இரட்டிப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது. நேற்று நேர்ந்த சூரிய புயலால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை என்றாலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் அமெரிக்காவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் ரேடியோ தொலைத்தொடர்புகள் பாதிப்படைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதே வேளையில், கரும்புள்ளி அளவு வளர்ச்சி அடைந்துள்ளதால், இனி வரும் நாட்களில் அடுத்தடுத்து சூரிய புயல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சூரியனில், AR3213 என்ற கரும்புள்ளி, 2 நாட்களுக்கு முன்னர் தென்படவில்லை. ஆனால், இப்போது அது ஒரு லட்சம் கிலோ மீட்டர் பரப்பளவிற்கு சூரியனின் மேற்பரப்பை ஆக்கிரமித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன், அதில் பூமியை விட பெரிய அளவில் 2 மையப் புள்ளிகள் உள்ளன. இவை, தொடர்ந்து கடுமையான சூரிய வெடிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu