கடந்த நவம்பர் மாதம் ஐசிசி இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது.
இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இலங்கை அணி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடிய 9 போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது. இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது. அதனைத் தொடர்ந்து இலங்கை அணியை இடைநீக்கம் செய்வதாக ஐசிசி அதிரடி உத்தரவிட்டது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்து தடைகளையும் நீக்குவதாக ஐசிசி தற்போது அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து இடை நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும், அரசின் தலையீடு எதுவும் இல்லை என்பதைய உறுதி செய்த பின்னரே தடை நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.