கிரெடிட் சூயிஸ் வங்கி பங்கு மதிப்பு 29% சரிவு

March 16, 2023

ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய வங்கியாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த கிரெடிட் சூயிஸ் வங்கி அறியப்படுகிறது. தற்போது, அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி ஆகிய வங்கிகள் நிதி நெருக்கடியால் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக, கிரெடிட் சூயிஸ் வங்கியின் பங்கு மதிப்பு சரியத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே, நிர்வாக குறைபாடு காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக வங்கியின் வாடிக்கையாளர்கள் வெளியேறி வரும் நிலையில், இந்த செய்தி வெளிவந்துள்ளது. மேலும், இந்த வங்கியின் 9.88% பங்குகளை, கடந்த ஆண்டு வாங்கிய […]

ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய வங்கியாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த கிரெடிட் சூயிஸ் வங்கி அறியப்படுகிறது. தற்போது, அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி ஆகிய வங்கிகள் நிதி நெருக்கடியால் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக, கிரெடிட் சூயிஸ் வங்கியின் பங்கு மதிப்பு சரியத் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே, நிர்வாக குறைபாடு காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக வங்கியின் வாடிக்கையாளர்கள் வெளியேறி வரும் நிலையில், இந்த செய்தி வெளிவந்துள்ளது. மேலும், இந்த வங்கியின் 9.88% பங்குகளை, கடந்த ஆண்டு வாங்கிய சவுதி நேஷனல் பேங்க், இந்த வங்கியில் மேலும் முதலீடுகள் செய்யும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது . எனவே, நேற்று ஒரே நாளில், கிரெடிட் சூயிஸ் வங்கியின் பங்கு மதிப்பு 29% வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், இந்த வங்கி தொடர்ந்து வீழ்ச்சிப் பாதையில் செல்லும் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu