ஈரானின் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்திற்கு தனது முடியை வெட்டி ஆதரவு தெரிவித்தார் ஸ்வீடிஷ் யூரோ எம்.பி.

October 6, 2022

ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது . இந்நிலையில் ஸ்வீடிஷ் யூரோ எம்பி அபிர் அல் சஹ்லானி, பாராளுமன்றத்தில் தனது தலைமுடியை கத்தரித்து ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அத்துடன் தெஹ்ரானுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார். தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் 22 வயதான மாஷா அமினி என்ற […]

ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது . இந்நிலையில் ஸ்வீடிஷ் யூரோ எம்பி அபிர் அல் சஹ்லானி, பாராளுமன்றத்தில் தனது தலைமுடியை கத்தரித்து ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அத்துடன் தெஹ்ரானுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த மாதம் 17-ம் தேதி உயிரிழந்தார். அதைக் கண்டித்து ஈரான் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. இந்நிலையில் ஸ்வீடிஷ் யூரோ எம்பி அபிர் அல் சஹ்லானி, பாராளுமன்றத்தில் தனது தலைமுடியை கத்தரித்து ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய விவாதத்தில் உரையாற்றிய சுவீடன் எம்.பி அபிர் அல் சஹ்லானி, ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமக்கள் அனைவரும் ஈரானில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ௯றினார். ஈரான் பெண்கள் சுதந்திரமாக நடமாடும் வரை இத்தகைய போராட்டங்கள் தொடரும் என்றும் எச்சரித்தார். அதுமட்டுமின்றி பாராளுமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் பெண்கள் வாழ்க்கை, சுதந்திரமானது என்று அவர் கூச்சலிட்டார். மேலும் அதில் ஈரானில் பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டுவது போன்ற முக்கிய படம் இடம்பெற்றது. அதேபோல் இசபெல்லே ஹப்பர்ட், ஜூலியட் பினோச் மற்றும் மரியன் கோட்டிலார்ட் உள்ளிட்ட பிரெஞ்சு திரைப்பட நட்சத்திரங்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முடி வெட்டப்பட்ட பதிவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். அது பாராளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் ஸ்வீடிஷ் பாராளுமன்ற உறுப்பினர் அல் சஹ்லானி , சமீபத்திய ஐ.நா பொதுச் சபையில் ஈரானில் உள்ள பெண்களுக்கான நிலைப்பாட்டை எடுக்க தவறியதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஜோசப் பொரெல் மீது குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த ஜோசப் பொரெல், இந்த போராட்ங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐரோப்பிய ஒன்றியம் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை திட்டமிட்டு வருவதாக கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu