ஸ்விக்கி நிறுவனத்தில் 380 பேர் பணி நீக்கம்

January 20, 2023

இந்தியாவின் முன்னணி உணவு மற்றும் மளிகை பொருட்கள் விநியோக நிறுவனமான ஸ்விக்கி, 380 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீ ஹர்ஷா மஜட்டி, ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையாக இந்த பணி நீக்கம் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மஜட்டி, “நிறுவனத்தின் வளர்ச்சி தவறாக கணக்கிடப்பட்டதால், அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, இந்த பணி நீக்கம் […]

இந்தியாவின் முன்னணி உணவு மற்றும் மளிகை பொருட்கள் விநியோக நிறுவனமான ஸ்விக்கி, 380 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீ ஹர்ஷா மஜட்டி, ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையாக இந்த பணி நீக்கம் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மஜட்டி, “நிறுவனத்தின் வளர்ச்சி தவறாக கணக்கிடப்பட்டதால், அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, இந்த பணி நீக்கம் மேற்கொள்ளப்படுகிறது” என்று கூறியுள்ளார். மேலும், பணி நீக்கம் செய்யப்படுபவர்களுக்கு 3 முதல் 6 மாத கால சம்பளப் பணம் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். அத்துடன், ஸ்விக்கி நிறுவனத்தின் ‘மீட்’ வர்த்தகப் பிரிவை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். அதே வேளையில், இன்ஸ்டாமார்ட் மூலம் இதன் வர்த்தகம் தொடர்ந்து இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu