சுவிட்சர்லாந்தில் பர்காவுக்கு தடை

November 8, 2024

சுவிட்சர்லாந்து, 2025 ஜனவரி 1 முதல் பொதுவெளிகளில் முகம் மூடியபடி வருவதற்கு தடை விதிக்கும் புதிய சட்டத்தை அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இது, முகத்தை மறைக்கும் பர்கா போன்ற ஆடை அணிவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஆகும். தடை விதிமுறையை மீறினால், ஆயிரம் சுவிஸ் பிராங்க்ஸ் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம், 2021 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து அரசின் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகு, முஸ்லிம் அமைப்புகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டன. எனினும், இந்த தடை […]

சுவிட்சர்லாந்து, 2025 ஜனவரி 1 முதல் பொதுவெளிகளில் முகம் மூடியபடி வருவதற்கு தடை விதிக்கும் புதிய சட்டத்தை அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

இது, முகத்தை மறைக்கும் பர்கா போன்ற ஆடை அணிவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஆகும். தடை விதிமுறையை மீறினால், ஆயிரம் சுவிஸ் பிராங்க்ஸ் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம், 2021 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து அரசின் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகு, முஸ்லிம் அமைப்புகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டன. எனினும், இந்த தடை விமானங்களில், தூதரகங்களிலும், வழிபாட்டுத் தலங்கள், புனித தளங்கள் மற்றும் மசூதிகளுக்கு பொருந்தாது என்று ஃபெடரல் கவுன்சில் அறிவித்துள்ளது.

மேலும், உடல்நிலை மற்றும் பாதுகாப்புக்கான காரணங்களுக்காக முகம் மூடுவதற்கு அனுமதி உண்டு. ஆனால், மத அல்லது தட்பவெப்ப நிலையை காரணமாக முகத்தை மறைப்பது தடை செய்யப்படுகிறது. சிலர் தங்களை வெளிப்படுத்த விரும்பாதபோது, முன்னதாக அனுமதி பெறுவதன் மூலம் முகத்தை மூடியபடி நடக்க முடியும். இந்த சட்டம், பல சர்ச்சைகளுக்கு மத்தியில், 2025ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu