சையத் மோடி சர்வதேச பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்ஷயா சென் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
உத்தரப் பிரதேசம் லக்னோவில் நடைபெற்று வரும் சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில், இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளம் வீரர்களின் போட்டி நடைபெறுகிறது. இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் லக்ஷயா சென், 2வது சுற்றில் இஸ்ரேலின் டேனில் டுபோவென்கோவை 21-14, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.இந்த போட்டி சுமார் 35 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. லக்ஷயா சென் காலிறுதியில் தனது சகநாட்டு வீரர் லுவாங் மைனமை எதிர்கொள்கிறார்.