சிரியாவில் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் - 2 தளபதிகள் பலி

April 2, 2024

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் இரண்டு ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் தூதரகம் பலத்த சேதம் அடைந்தது. இந்த தாக்குதலின் போது தூதரகத்தில் இருந்த இரண்டு ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் முகமது ரிசா. அதில் ஒருவர் லெபனானில் குவதை படையை வழிநடத்தி சென்ற முக்கிய தளபதியாவார். இவருடன் துணை தளபதி முகமது ஹதியும் கொல்லப்பட்டுள்ளார். […]

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் இரண்டு ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் தூதரகம் பலத்த சேதம் அடைந்தது. இந்த தாக்குதலின் போது தூதரகத்தில் இருந்த இரண்டு ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் முகமது ரிசா. அதில் ஒருவர் லெபனானில் குவதை படையை வழிநடத்தி சென்ற முக்கிய தளபதியாவார். இவருடன் துணை தளபதி முகமது ஹதியும் கொல்லப்பட்டுள்ளார். அத்துடன் 5 அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்

இந்த தாக்குதலின் போது தூதரகத்தின் முக்கிய கட்டிடம் தாக்கப்படவில்லை. அங்கு ஈரான் தூதரகம் அதிகாரிகளின் வீடுகளும் உள்ளன. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தூதர் ஹுசைன் அக்பாரி கூறியுள்ளார். ஈரான் தூதரகம் மீதான இந்த தாக்குதல் அப்பகுதியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பிற நாடுகள் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நாசர் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu