டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் அமெரிக்காவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அணிகள் மோதியதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அமெரிக்க அணி 18.5 ஓவர்களில் 114 ரன்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 9.4 நான்கு ஓவர்களில் 117 ரன்களை குவித்தது. இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனால் அரை இறுதி சுற்றிற்கு முதலில் முன்னேறிய அணி என்று பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது














