தைவான் அதிபர் அமெரிக்கா சென்றுள்ள வேளையில், தைவானை சூழ்ந்துள்ள சீன போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள்

April 6, 2023

தைவான் அதிபர் ட்சய் இங் வென், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் -ல், அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கர்த்தியை சந்தித்தார். அதே வேளையில், தைவானை சுற்றி சீனாவின் போர் வாகனங்கள் முற்றுகையிட்டதாக தைவான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. “இன்று காலை, சீனாவின் நீர்மூழ்கி தாக்கும் ஹெலிகாப்டர் ஒன்று மற்றும் மூன்று போர்க்கப்பல்கள் தைவானை சூழ்ந்ததாக தகவல் கிடைத்தது. அதன் பெயரில், ராணுவம் முடுக்கி விடப்பட்டுள்ளது” என்று தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இது அத்துமீறிய […]

தைவான் அதிபர் ட்சய் இங் வென், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் -ல், அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கர்த்தியை சந்தித்தார். அதே வேளையில், தைவானை சுற்றி சீனாவின் போர் வாகனங்கள் முற்றுகையிட்டதாக தைவான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“இன்று காலை, சீனாவின் நீர்மூழ்கி தாக்கும் ஹெலிகாப்டர் ஒன்று மற்றும் மூன்று போர்க்கப்பல்கள் தைவானை சூழ்ந்ததாக தகவல் கிடைத்தது. அதன் பெயரில், ராணுவம் முடுக்கி விடப்பட்டுள்ளது” என்று தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இது அத்துமீறிய செயல் என கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாகவே, தைவான் மற்றும் அமெரிக்காவின் நெருக்கத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu