பயணிகள் கூடும் முக்கிய இடங்களில் ரீல்ஸ் எடுக்கும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், ரெயில்வே துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பதிவிடும் நோக்கத்தில், ரெயில் நிலையங்களிலும், தண்டவாளங்களிலும் செல்போனில் வீடியோ எடுத்து உயிரை பலியிடும் சம்பவங்கள் நடந்துள்ளன. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், இனி ரெயில் நிலையங்களில் வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிடும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் ரெயில்வே போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பயணிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவோர் மீது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.