ஆப்கானிஸ்தான் - பெண் கல்விக்காக குரல் கொடுத்து பிரபலமான பேராசிரியர் கைது

February 4, 2023

ஆப்கானிஸ்தானில், பெண்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்து வருகிறது. மேலும், அந்நாட்டில் பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டை சேர்ந்த பேராசிரியர் இஸ்மாயில் மசால் என்பவர், தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில், பெண்களுக்கு மறுக்கப்படும் கல்வி தனக்கும் தேவை இல்லை என்பதாக கூறி, தனது மேற்படிப்பு சான்றிதழை கிழித்தெறிந்தார். இது உலக அளவில் பேசு பொருளானது. மேலும், அவர் தொடர்ந்து, தாலிபான் அரசை விமர்சித்தும், வீதிகளில் நின்று புத்தகங்களை வழங்கியும் வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கலவரத்தை […]

ஆப்கானிஸ்தானில், பெண்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்து வருகிறது. மேலும், அந்நாட்டில் பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டை சேர்ந்த பேராசிரியர் இஸ்மாயில் மசால் என்பவர், தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில், பெண்களுக்கு மறுக்கப்படும் கல்வி தனக்கும் தேவை இல்லை என்பதாக கூறி, தனது மேற்படிப்பு சான்றிதழை கிழித்தெறிந்தார். இது உலக அளவில் பேசு பொருளானது. மேலும், அவர் தொடர்ந்து, தாலிபான் அரசை விமர்சித்தும், வீதிகளில் நின்று புத்தகங்களை வழங்கியும் வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கலவரத்தை தூண்டுவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, தாலிபான் அரசால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டபோது, அதிகாரிகள் அவரை கடுமையாக தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஆப்கானிஸ்தான் சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu