ஆப்கானிஸ்தான் - தனித்து வாழும் பெண்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்

January 23, 2024

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், திருமணமாகாமல் தனித்து வாழும் பெண்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் உள்ளது. ஐநா சபை வெளியிட்ட அறிக்கையில் இது தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தானில், திருமணமாகாமல் தனித்து வாழும் பெண்கள் வெளியில் சென்று வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தனித்து வாழும் பெண்கள் பயணம் செய்யவும் தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். பொதுவாக, பெண்கள் தனியாக நெடுந்தூரப் பயணங்கள் செய்வது ஆப்கானிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் ரத்த […]

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், திருமணமாகாமல் தனித்து வாழும் பெண்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் உள்ளது. ஐநா சபை வெளியிட்ட அறிக்கையில் இது தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஆப்கானிஸ்தானில், திருமணமாகாமல் தனித்து வாழும் பெண்கள் வெளியில் சென்று வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தனித்து வாழும் பெண்கள் பயணம் செய்யவும் தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். பொதுவாக, பெண்கள் தனியாக நெடுந்தூரப் பயணங்கள் செய்வது ஆப்கானிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் ரத்த பந்த ஆண் துணை அல்லது கணவர் துணையோடு மட்டுமே வெளியில் வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது. இத்தகைய கொடிய அடக்குமுறைகளால் ஆப்கானிஸ்தானில் வாழ்வது பற்றி கற்பனை கூட செய்ய முடியவில்லை என ஐநா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu