ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புட்டினை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது - உக்ரைன் அதிகாரி

October 31, 2022

உக்ரைன் போர் முடியும் வரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பதவியில் நீடிக்க மாட்டார் என்றும் அவரை மாற்றுவது குறித்து அதிகாரிகள் ஏற்கனவே ஆலோசித்து வருவதாகவும் உக்ரைனின் பாதுகாப்பு உளவுத்துறை தலைவர் கூறியுள்ளார். விளாடிமிர் புடினை ஆட்சியில் இருந்து அகற்றுவது குறித்து ரஷ்ய அதிகாரிகள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். அவருக்குப் பதிலாக யார் இருப்பார்கள் என்பது குறித்து தீவிர விவாதங்கள் நடந்து வருகின்றன என்று மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் கூறியதாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. […]

உக்ரைன் போர் முடியும் வரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பதவியில் நீடிக்க மாட்டார் என்றும் அவரை மாற்றுவது குறித்து அதிகாரிகள் ஏற்கனவே ஆலோசித்து வருவதாகவும் உக்ரைனின் பாதுகாப்பு உளவுத்துறை தலைவர் கூறியுள்ளார்.

விளாடிமிர் புடினை ஆட்சியில் இருந்து அகற்றுவது குறித்து ரஷ்ய அதிகாரிகள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். அவருக்குப் பதிலாக யார் இருப்பார்கள் என்பது குறித்து தீவிர விவாதங்கள் நடந்து வருகின்றன என்று மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் கூறியதாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

படையெடுப்பின் ஆரம்ப நாட்களில் இருந்து ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஒரு முக்கிய துறைமுக நகரமான கேர்சனை திரும்பப் பெற உக்ரைன் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது. மேஜர் புடனோவ் மேலும் கூறுகையில், உக்ரைன் நவம்பர் மாத இறுதிக்குள் கெர்சனை மீண்டும் கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளதாகவும், 2014ல் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியாவை திரும்பப் பெற முயற்சிக்கும் என்றும் கூறினார்.

செப்டம்பரில் ரஷ்யப் படைகள் பெரும் தோல்விகளைச் சந்தித்ததில் இருந்து, படைகளை அதிகரித்து ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தை இணைத்துக்கொள்வதாக அறிவித்தார். மீண்டும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தபோவதாக அச்சுறுத்தினார். சமீபத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் உக்ரைனின் 40 சதவீதத்திற்கும் அதிகமான எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் அழிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் எரிசக்தி விநியோகம் மற்றும் இருட்டடிப்புக்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu