தமிழக பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்

February 19, 2024

இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் 2024ல் வெளியான முக்கிய அறிவிப்புகள்: தமிழகத்தின் செலவுகள் 47681 கோடியாக உயர்ந்து, நிதி பற்றாக்குறை 94060 கோடியாக அதிகரிக்கும். ஆட்டிசம் குழந்தைகளுக்கு 25 கோடி ரூபாய் மதிப்பில் உயர்திறன் மையம் அமைக்கப்படும். சாலை விபத்து நிகழ்ந்த 48 மணி நேரத்துக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும். இதற்கு உச்சவரமாக 2 லட்சம் ரூபாய் அளிக்கப்படும். வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்த 88 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டங்கள் கொண்டுவரப்படுகிறது. தமிழகத்துக்கு 500 […]

இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் 2024ல் வெளியான முக்கிய அறிவிப்புகள்:

தமிழகத்தின் செலவுகள் 47681 கோடியாக உயர்ந்து, நிதி பற்றாக்குறை 94060 கோடியாக அதிகரிக்கும்.

ஆட்டிசம் குழந்தைகளுக்கு 25 கோடி ரூபாய் மதிப்பில் உயர்திறன் மையம் அமைக்கப்படும்.

சாலை விபத்து நிகழ்ந்த 48 மணி நேரத்துக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும். இதற்கு உச்சவரமாக 2 லட்சம் ரூபாய் அளிக்கப்படும்.

வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்த 88 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டங்கள் கொண்டுவரப்படுகிறது.

தமிழகத்துக்கு 500 புதிய மின்சார பேருந்துகள் வாங்கப்படுகின்றன.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50000 பேருக்கு அரசு பணி வழங்கப்படும்.

இளைஞர் திருவிழாக்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு. பல்வேறு கலை திறமைகளுக்கான மேடை வழங்கப்படும்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களில் திருப்பணி செய்ய 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.

மாநிலம் எங்கும் சாலை வசதிகள் உலக தரத்தில் மேம்படுத்தப்படும். சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

சேலம், வேலூர், தஞ்சாவூர், திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களில் தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு, 13000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

தமிழ் புதல்வன் புதிய திட்டத்துக்கு 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள நான்கு நகரங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் தொடங்கப்படுகிறது. விருதுநகர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுகிறது. கோவையில் கலைஞர் கருணாநிதி பெயரில் புதிய நூலகம் தொடங்கப்படுகிறது.

மூன்றாம் பாலினத்தவர்களின் கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை அரசு ஏற்கும். மேலும், மாற்று பாலினத்தை சேர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கும் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் அளிக்கப்படும்.

தனியார் நிறுவனங்கள் துணையோடு ஆறுகள் மற்றும் நதிகள் தூய்மைப்படுத்தப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu