தமிழக பட்ஜெட் மார்ச் 20-ந் தேதி தாக்கல் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

February 28, 2023

தமிழக சட்டசபையில் மார்ச் 20-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு நேற்று சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில், 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 20-ந் தேதி காலை 10 மணிக்கு சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்கிறார். அதன் பின்னர் 2023-24-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையையும், 2022-23-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவீன மானிய கோரிக்கையையும் நிதித்துறை அமைச்சர் மார்ச் 28-ந் தேதி சட்டசபையில் தாக்கல் […]

தமிழக சட்டசபையில் மார்ச் 20-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு நேற்று சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில், 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 20-ந் தேதி காலை 10 மணிக்கு சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்கிறார். அதன் பின்னர் 2023-24-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையையும், 2022-23-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவீன மானிய கோரிக்கையையும் நிதித்துறை அமைச்சர் மார்ச் 28-ந் தேதி சட்டசபையில் தாக்கல் செய்வார். சட்டசபையில் மார்ச் 20-ந் தேதி பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்து வாசித்தளித்த பிறகு, சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூடும். அந்த கூட்டத்தில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது பற்றி தீர்மானிக்கப்படும் என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu