தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகள் துபாய்க்கு 4 நாள் கல்வி சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஆண்டு வினாடி வினா போட்டியானது நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் சிறப்பாக பங்காற்றியவர்களை வெளிநாட்டிற்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்வதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் மாணவர்களை துபாய் அழைத்து செல்வதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த டிசம்பரில் ஓமிக்ரான் பரவல் அதிகமாக இருந்த காரணத்தால் அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள முக்கிய இடங்களுக்கு அரசு சார்பில் 67 மாணவர்கள் சுற்றுலாவுக்காக அழைத்து செல்லப்படவுள்ளனர். மேலும் ஷார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சிக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர். இவர்களுடன் 5 ஆசிரியர்கள், பள்ளிகல்வித்துறையை சேர்ந்த 3 அதிகாரிகள், பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செல்கின்றனர்.