15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் அரசு பேருந்துகளின் இயக்கத்தை மேலும் நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் அரசு வாகனங்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்ற மத்திய அரசு ஸ்கிராப்பிங் கொள்கையை சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில் ஸ்கிராப்பிங் கொள்கையை ஒன்றரை ஆண்டுகள் நீட்டிப்பு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பெரும்பாலான பேருந்துகள் 15 ஆண்டுகளை தாண்டி இயக்கப்படுகின்றன. 1,500 அரசு பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும். எனவே ஸ்கிராப்பிங் கொள்கையில் ஒன்றரை ஆண்டுகள் நீட்டிப்பு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.