தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறையின் துணை செயலாளர் ஆக தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குனர் பிரதாப் மாற்றப்பட்டுள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனர் ஆக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சிறப்பு செயலாளர் ஜெயகாந்தன் மாற்றப்பட்டுள்ளார். மேலும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இயக்குனராக இருந்த ரத்னா ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இணை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். வணிக வரிகள் மற்றும் மாநில வரிகள் இணை கமஷனர் காயத்ரி கிருஷ்ணன், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் விஜய கார்த்திகேயன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குனர் ஆகவும், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் திட்ட இயக்குனராகவும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் விஜய கார்த்திகேயன் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராகவும் முழு கூடுதல் பொறுப்பு வகிக்க உள்ளார். வேளாண்மை கூடுதல் இயக்குனர் ஸ்ரேயா சிங், தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் செயல் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான அரசாணை இன்று தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனாவால் வெளியிடப்பட்டுள்ளது.