தமிழகத்தில் உள்ள 7 சுங்கச்சாவடிகளின் உயர்த்தப்பட்ட கட்டண முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் 54 சுங்கச்சாவடிகள் உள்ளது. இவற்றில் வழக்கமாக ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும்.அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மணகெதி, கல்லக்குடி, வல்லம், இமைக்க ரியாந்தல், தென்னமாதேவி ஆகிய ஐந்து சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தபடுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடிகளிலும் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மொத்தம் ஏழு சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்ககட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி இன்று முதல் வாகன ஓட்டிகள் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும். மற்ற சுங்க சாவடிகளில் செப்டம்பர் மாதம் முதல் கட்டண உயர்வு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














