கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் ஆடவர், மகளிர் இரட்டையர் பிரிவில் தமிழகம் 2 தங்கம் வென்றுள்ளது.
ஆறாவது கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டியில் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் தமிழ்நாட்டின் ரேவதி- லட்சுமி இணை 6-2,6-1 என்ற நேர் செட் கணக்கில் கர்நாடகா இணையை எதிர்த்து தங்கம் வென்றது. இதே போல டென்னிஸ் ஆடவர் இரட்டை பிரிவில் தமிழ்நாடு வீரர்களான பிரணவ் - மகாலிங்கம் இணை 6-3,6-1 என்ற புள்ளிகள் கணக்கில் மகாராஷ்டிரா இணையை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றுள்ளது.