பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவரின் தலைமை அதிகாரியாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது பெருமிதத்துக்குரிய விடயமாகும்.
பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்ட, டாடா குழுமத்தின் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) தமிழ்நாட்டைச் சேர்ந்த P.B. பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய CEO அட்ரியன் மார்டெல் அக்டோபரில் பதவியை விலக உள்ள நிலையில், பாலாஜி நவம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக பதவியேற்கவுள்ளார். முன்னதாக, ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றிய பாலாஜி, 2017 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாக இணைந்தார். தற்போது டாடா குழுமத்தில் தலைமை நிதி மேலாண்மை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நியமனம் இந்திய தொழில்துறைக்கு மிகுந்த மரியாதையை வழங்குகிறது.