இலங்கை தமிழர்களின் பொருளாதார, சமூக உரிமைகள் காக்கப்படும் - ரணில்

February 20, 2024

இலங்கையில் தமிழர்களின் பொருளாதார சமூக உரிமைகளை காக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக அந்நாட்ட அதிபர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். நேற்று இலங்கையில் தேயிலைத் தோட்ட பணியாளர்களுக்கு இந்திய அரசின் நிதி உதவியோடு 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தரும் பாரத் லங்கா திட்டத்தின் நான்காவது பகுதியை அதிபர் ரனில் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இலங்கையின் 10 மாவட்டங்களில் உள்ள 45 தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் 1300 தொழிலாளர்களுக்கு இதன் மூலம் வீடு கட்டி தரப்பட உள்ளது. அப்போது […]

இலங்கையில் தமிழர்களின் பொருளாதார சமூக உரிமைகளை காக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக அந்நாட்ட அதிபர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

நேற்று இலங்கையில் தேயிலைத் தோட்ட பணியாளர்களுக்கு இந்திய அரசின் நிதி உதவியோடு 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தரும் பாரத் லங்கா திட்டத்தின் நான்காவது பகுதியை அதிபர் ரனில் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இலங்கையின் 10 மாவட்டங்களில் உள்ள 45 தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் 1300 தொழிலாளர்களுக்கு இதன் மூலம் வீடு கட்டி தரப்பட உள்ளது. அப்போது நிகழ்ச்சியின் போது அதிபர் அணில் பேசினார். அவர் கூறுகையில், இந்த குடியிருப்பு திட்டத்திற்கு இந்தியா ஆதரவளித்துள்ளது, அதற்கு நன்றி. இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை தமிழ் சமூகம் அளித்துள்ளது. ஆனால் நிலம் மற்றும் வீட்டு உரிமையில்லாததால் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அவர்களுடைய அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. எனவே தமிழர்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை காக்க வேண்டிய சூழல் உள்ளது. வீடுகளை கட்டுவதற்கான நடவடிக்கையை எனது அரசு தீவிரமாக தொடங்கியுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா காணொளி வழியாக பேசினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu