தஞ்சாவூர் அப்பர் சுவாமி கோவில் தேரோட்டத்தில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலி

April 27, 2022

தஞ்சாவூர், ஏப்ரல் 27, 2022: தஞ்சை கள்ளிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் சுவாமி கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் தேரோட்டம் இவ்வருடம் ஏப்ரல் 26, 27-ஆம் தேதிகளில் நடைபெற்றது.

தஞ்சாவூர், ஏப்ரல் 27, 2022:
தஞ்சை கள்ளிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் சுவாமி கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் தேரோட்டம் இவ்வருடம் ஏப்ரல் 26, 27-ஆம் தேதிகளில் நடைபெற்றது. தேர் பவனி வரும் பொழுது, மேலே இருந்த உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பிகளில் உரசி, தீப்பிடித்தது. இந்த விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 7 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். அத்துடன், படுகாயமடைந்த 15 பேர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இது தொடர்பாக, திருச்சி சரகக் காவல் துறை அதிகாரி பாலகிருஷ்ணன், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாகக் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். அத்துடன், தமிழக அரசு சார்பாக, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூருக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu