டாடா கிளிக் தற்போது ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த தளமாக மாறியுள்ளது. இதற்கு ஏற்ப தனது பெயரை டாடா கிளிக் ஃபேஷன் என மாற்றியுள்ளது. இதுவரை பொதுவான பொருட்களை விற்பனை செய்து வந்த இந்த தளம் இனி ஃபேஷன் உலகில் முழுமையாக கவனம் செலுத்தும். புதிய லோகோ, பிராண்ட் மேனிஃபெஸ்டோ, பயன்பாடு மற்றும் இணையதளம் என அனைத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தனித்துவத்தை வெளிப்படுத்துவதே இந்த புதிய மாற்றத்தின் முக்கிய நோக்கம் என தலைமை நிர்வாக அதிகாரி கோபால் அஸ்தானா தெரிவித்துள்ளார். 6000-க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் தயாரிப்புகள் இங்கு கிடைக்கும். ஸ்னீக்கர் ஸ்டோர், இண்டி ஃபைண்ட்ஸ், திருமண அங்காடி போன்ற பல்வேறு பிரிவுகளாக தளம் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் வாடிக்கையாளர்கள் தயாரிப்புகளை மெய்நிகர் முறையில் அணிந்து பார்க்கும் வசதி மற்றும் தனிநபருக்கு ஏற்றவாறு பரிந்துரைகள் வழங்கும் வசதியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.