டாட்டா குழுமத்துடன் ஏர்பஸ் ஹெலிகாப்டர் நிறுவனம் இணைந்து இந்தியாவில் ஹெலிகாப்டர் உற்பத்திக்கான மையத்தை கட்டமைக்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக ஹெலிகாப்டர்களை அசெம்பிள் செய்யும் மையத்தை ஏர்பஸ் ஹெலிகாப்டர் நிறுவனம் டாடா குழுமத்துடன் இணைந்து கட்டமைப்பு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இது மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகும் பைனல் அசெம்பிலி லைன் - இல் இந்தியாவில் ஹெலிகாப்டர்கள் அசெம்பிலி செய்யப்பட உள்ளன. இதனால் அசெம்பிள் செய்யப்படும் ஹெலிகாப்டர்கள் இந்தியாவிற்கு போக்குவரத்து பயன்பாடுகளுக்கு பயன்படுத்த உள்ளன. இவை தவிர வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இதற்காக டாட்டா குழுமத்தின் கீழ் இயங்கும் டாடா அட்வான்ஸ் சிஸ்டம் லிமிடெட் நிறுவனம் இணைந்து இதனை கட்டமைக்க உள்ளது.