100 பிரத்யேக ஆப்பிள் விற்பனையகங்களை திறக்க டாடா குழுமம் திட்டம்

December 13, 2022

டாடா குழுமம், ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்பனை செய்ய 100 பிரத்தியேக விற்பனையகங்களை திறக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. டாடா குழுமத்தின் இன்ஃபினிட்டி ரீடைல் என்ற பிரிவு க்ரோமா ஸ்டோர்களில் மின்னணு சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இங்கு, ஆப்பிள் பொருட்கள் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பிரத்யேகமாக, ஆப்பிள் பொருட்களை விற்பனை செய்யும் 100 க்ரோமா விற்பனையகங்கள் அமைக்கப்படும் என்று டாடா குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது தொடர்பாக வணிக வளாகங்களுடன் பேச்சு […]

டாடா குழுமம், ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்பனை செய்ய 100 பிரத்தியேக விற்பனையகங்களை திறக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

டாடா குழுமத்தின் இன்ஃபினிட்டி ரீடைல் என்ற பிரிவு க்ரோமா ஸ்டோர்களில் மின்னணு சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இங்கு, ஆப்பிள் பொருட்கள் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பிரத்யேகமாக, ஆப்பிள் பொருட்களை விற்பனை செய்யும் 100 க்ரோமா விற்பனையகங்கள் அமைக்கப்படும் என்று டாடா குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது தொடர்பாக வணிக வளாகங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும், ஆப்பிள் நிறுவனம் மற்றும் டாடா குழுமம், இது குறித்த நேரடி தகவல்களை வெளியிடவில்லை. இந்நிலையில், டாடா குழுமம், ஆப்பிள் ஐபோன் உற்பத்தியில் ஈடுபடும் வெஸ்ட்ரான் நிறுவனத்தின் ஆலையை 50 மில்லியன் ரூபாய்க்கு கையகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu