டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டாடா நெக்ஸான் ஃபேஸ்லிப்ட் என்ற புதிய வாகனத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் இதன் ஆரம்ப விலை 8.1 லட்சம் என கூறப்பட்டுள்ளது. இதே மாடல் வாகனத்தின் உயர்ரக வேரியன்ட் 14.74 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 4ம் தேதி முதல், டாடா நெக்ஸான் ஃபேஸ்லிப்ட் வாகனத்துக்கான முன்பதிவு தொடங்கப்பட்டது. சுமார் 21,000 முன்பணம் செலுத்தி வாகனத்துக்கான முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த புதிய மின்சார வாகனத்தில் பல்வேறு நவீன அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாகனம், மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்கோ, சிட்டி, ஸ்போர்ட் ஆகிய 3 டிரைவிங் மோடுகளில் டாடா நெக்ஸான் பேஸ்லிஃப்ட் வாகனம் வெளியிடப்படுகிறது.