டாடா பவர் - குஜராத்தில் 100 மெகா வாட் திறன் கொண்ட சூரிய சக்தி நிலையம் அமைக்கிறது

September 16, 2022

குஜராத்தில் எஸ்ஜேவிஎன் லிமிடெட் (SJVN Limited) என்ற பொதுத்துறை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துடன் கூட்டணியில் இணைந்து, 100 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க டாடா பவர் சோலார் சிஸ்டம்ஸ் லிமிடெட் (TPSSL) நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவு (TPREL) திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மதிப்பு 612 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், பெரிய நிலப்பரப்பில், தரையில், சூரிய தகடுகள் அமைக்கப்பட உள்ளன. இந்திய அரசுக்கும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் […]

குஜராத்தில் எஸ்ஜேவிஎன் லிமிடெட் (SJVN Limited) என்ற பொதுத்துறை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துடன் கூட்டணியில் இணைந்து, 100 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க டாடா பவர் சோலார் சிஸ்டம்ஸ் லிமிடெட் (TPSSL) நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவு (TPREL) திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மதிப்பு 612 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், பெரிய நிலப்பரப்பில், தரையில், சூரிய தகடுகள் அமைக்கப்பட உள்ளன.

இந்திய அரசுக்கும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் மாநில அரசுக்கும் இடையிலான கூட்டணியில் இந்த திட்டம் உருவாகியுள்ளது. இந்த திட்டத்திற்கான ஏலம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. கட்டண அடிப்படையிலான போட்டி ஏலத்தின் மூலம், இந்த திட்டம் டாடா குழுமத்திற்கு கிடைத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளிவந்த பின்னர், அடுத்த 11 மாதங்களில் இந்த திட்டம் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

எஸ்ஜேவிஎன் நிறுவனம், நீர் மின் உற்பத்தி, அனல் மின் உற்பத்தி, சூரிய மின் உற்பத்தி, காற்றாலைகள் மின் உற்பத்தி மற்றும் இதர மின்சார பரிவர்த்தனை மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. அதே வேளையில், டாடா பவர் நிறுவனம், சூரிய மின் தகடுகள் மூலம், மின் உற்பத்தி செய்வதில் முன்னோடியாக விளங்கி வருகிறது. எனவே, குஜராத்தின் ராகநேஸ்தா சோலார் பார்க் (Raghanesda solar park) பகுதியில் அமைக்கப்படவுள்ள இந்த சூரிய மின் உற்பத்தி நிலையம் முக்கியம் பெறுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu