விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம், ஏர் இந்தியா விமான நிறுவனத்துடன் மார்ச் 2024 ல் இணைக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விஸ்தாரா விமான நிறுவனம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் டாடா குழுமத்திற்கு சொந்தமானதாகும். தற்போது, அதனை ஏர் இந்தியாவுடன் இணைக்க உள்ளதால், ஏர் இந்தியாவின் மொத்த பங்குகளில் 25% சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு வழங்கப்படுகிறது. அந்த நிறுவனம் சுமார் 2000 கோடி ரூபாயை விமான நிறுவன செயல்பாடுகளுக்காக வழங்க உள்ளது. தற்போதைய நிலையில், விஸ்தாரா விமான நிறுவனத்தின் 51% பங்குகள் டாடாவிடமும், 49% பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இடமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
விஸ்தாரா, ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின்னர், மொத்தமாக 218 விமானங்கள் டாடா குழுமத்தால் இயக்கப்படும். எனவே, இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனமாகவும், இரண்டாவது பெரிய உள்நாட்டு விமான நிறுவனமாகவும், டாடா குழுமம் மாறும்.