கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு, டாடா குழுமத்தின் சார்பில் ஐபிஓ வெளியாக உள்ளது. டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ நவம்பர் 22 ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 24 வரை நிகழ உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு, டாடா டெக்னாலஜி கீழ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு வெளிவரும் முதல் ஐபிஓ இதுவாகும். இதன்போது, 60850278 பொது பங்குகள் வெளியிடப்பட உள்ளன. இவற்றில் டாடா டெக்னாலஜி, ஆல்ஃபா டிசி ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட், டாடா கேப்பிட்டல் கிரௌத் ஃபண்ட் 1 ஆகிய நிறுவனங்களின் பங்குகள் வெளியாகின்றன. இந்த பங்குகள், முறையே 11.41% 2.4% மற்றும் 1.2% சலுகையில் விற்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.