சர்வதேச நாளிதழான டைம்ஸ், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நபர் விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராக டெய்லர் ஸ்விஃப்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் இசைக்கலைஞர் டெய்லர் ஸ்விஃப்ட் ஆவார். அவர் கலாச்சார மற்றும் வணிக அடிப்படையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். அந்த வகையில் அவரது சாதனை பட்டியல் மிகவும் நீளமாக அமைந்துள்ளது. திறமையின் அடிப்படையில், அண்மையில் வெளியான அவரது ‘ஈராஸ் டூர்’ திரைப்படம் சர்வதேச அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. எனவே, 2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய டெய்லர் ஸ்விஃப்ட், நிகழாண்டின் சிறந்த நபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன்னதாக, கடந்த ஆண்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அதற்கு முன்னதாக டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் ஆகியோர் இந்த விருதைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.