டெக் மஹிந்திரா காலாண்டு முடிவுகள் வெளியீடு - பங்குகள் 10% உயர்வு

April 26, 2024

டெக் மஹிந்திரா நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், நிறுவனத்தின் நிகர லாபம் கிட்டத்தட்ட 41% வீழ்ச்சியடைந்து 661 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய் 6.2% சரிவடைந்து 12871 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, 2024 ஆம் நிதி ஆண்டில், டெக் மஹிந்திரா நிறுவனத்தின் நிகர லாபத்தில் 51.2% சரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெக் மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மோஹித் ஜோஷி அடுத்த 3 ஆண்டுகளுக்கான நிறுவனத்தின் திட்ட அறிக்கையை […]

டெக் மஹிந்திரா நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், நிறுவனத்தின் நிகர லாபம் கிட்டத்தட்ட 41% வீழ்ச்சியடைந்து 661 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய் 6.2% சரிவடைந்து 12871 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, 2024 ஆம் நிதி ஆண்டில், டெக் மஹிந்திரா நிறுவனத்தின் நிகர லாபத்தில் 51.2% சரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெக் மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மோஹித் ஜோஷி அடுத்த 3 ஆண்டுகளுக்கான நிறுவனத்தின் திட்ட அறிக்கையை நேற்று வெளியிட்டார். அதன்படி, 2027 ஆம் நிதி ஆண்டு வாக்கில், நிறுவனத்தின் வளர்ச்சி மற்ற நிறுவனங்களை விட கூடுதலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த செய்திகளின் விளைவாக, இன்றைய வர்த்தக நாளில், டெக் மஹிந்திரா பங்குகள் 10% அளவுக்கு உயர்ந்துள்ளன. நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1309.3 ரூபாய்க்கு வர்த்தகமானது. மேலும், நடப்பு மாதத்தில் டெக் மஹிந்திரா பங்குகள் 7% அளவுக்கு கூடுதலாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu