ஏ ஐ தொழிநுட்பத்தை பயன்படுத்தி தேர்தலில் சீனா சதி - மைக்ரோசாப்ட்

April 8, 2024

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி அமெரிக்கா, தென்கொரியா மற்றும் இந்திய தேர்தல்களில் சீனா பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் வரும் 19 முதல் ஜூன் ஒன்று வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் பத்தாம் தேதி தென்கொரியாவில் பொது தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களை சமூக ஊடகத்தில் […]

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி அமெரிக்கா, தென்கொரியா மற்றும் இந்திய தேர்தல்களில் சீனா பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில் வரும் 19 முதல் ஜூன் ஒன்று வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் பத்தாம் தேதி தென்கொரியாவில் பொது தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களை சமூக ஊடகத்தில் பரப்பி மேற்கண்ட நாடுகளின் தேர்தல்களில் பாதிப்பை ஏற்படுத்த சீனா முயற்சிப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இதன் மூலம் புவி அரசியல் ஆதாயங்களை பெற சீனா இணைக்கிறது.

இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சேர்ந்த கிளின்ட் வாட்ஸ் கூறியுள்ளதாவது, சீனாவின் இது போன்ற நடவடிக்கைகள் மூலம் தேர்தல் முடிவுகளில் பெரிய பாதிப்பு ஏற்படாது. என்ற போதிலும், சமூக ஊடகங்களில் காணொளிகள், ஒலிப்பதிவுகளை அதிகரிக்கும் முயற்சியில் சீனா ஈடுபட வாய்ப்புள்ளது. இதனை வடகொரியாவுடன் இணைந்து மேற்கொள்ளும் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu