வயநாடு தொகுதியில் உள்ள ராகுல் காந்தி அலுவலகத்திற்கு டெலிபோன், இன்டெர்நெட் இணைப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பாராளுமன்ற செயலகம் பறித்தது. எம்.பி.பதவி பறிபோனதால் டெல்லியில் உள்ள அவரது அரசு வீட்டை காலி செய்யும் படி உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட டெலிபோன் இணைப்பு மற்றும் இன்டெர் நெட் வசதிகளும் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.