கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பூங்கா திட்டத்திற்கு தற்காலிக தடை

வேளச்சேரி ஏரி பாதுகாப்புக்கான வழக்கில், கிண்டி மைதானத்தில் ஏரி அமைக்க முடிவெடுக்க தீர்ப்பாயம் பரிந்துரை செய்துள்ளது. தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யாததால் பூங்கா அமைப்பிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி ஏரி மாசடைந்து பரப்பளவு குறைந்திருப்பதைக் குறித்து, சமூக ஆர்வலர் குமரதாசன் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 118 ஏக்கரில் ஏரி அமைத்தால், வெள்ள பாதிப்பில் இருந்து வேளச்சேரியை பாதுகாக்க முடியும் எனத் தெரிவித்தது. தற்போது […]

வேளச்சேரி ஏரி பாதுகாப்புக்கான வழக்கில், கிண்டி மைதானத்தில் ஏரி அமைக்க முடிவெடுக்க தீர்ப்பாயம் பரிந்துரை செய்துள்ளது. தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யாததால் பூங்கா அமைப்பிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி ஏரி மாசடைந்து பரப்பளவு குறைந்திருப்பதைக் குறித்து, சமூக ஆர்வலர் குமரதாசன் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 118 ஏக்கரில் ஏரி அமைத்தால், வெள்ள பாதிப்பில் இருந்து வேளச்சேரியை பாதுகாக்க முடியும் எனத் தெரிவித்தது. தற்போது அந்த நிலம் பசுமைப் பூங்காவுக்காக மாற்றப்பட்டுள்ளதால், ஏன் ஏரி அமைக்கக்கூடாது என தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் விளக்கம் கோரப்பட்டது. ஆனால் அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், அந்த மைதானத்தில் பூங்கா அமைப்பதற்கு தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்தது. வழக்கு அடுத்த மாதம் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu